பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அவர்களைப்போலவே தான், அவளுடைய தொழில் முறையும் சுற்றுப்புறங்கள், செயல் புரியும் நபர்கள் ஆகிய புறக் காரணங்களினல் அவளுக்குக் கிட்டியிருக் கிறது. இந்த உண்மையை எனது வாடிக்கைக்காரர் களில் அநேகர் உணரவில்லை என்றே தோன்றுகிறது.??

  • தான் மேடம் ஆக வாழ்ந்து என் பிழைப்பை நடத்த வேண்டும் என்ருகிவிட்ட பிறகு, விபசாரம் ஒழுங்கானதா-தவருனதா என்ற பிரச்னையைப்பற்றிய அக்கறை எதுவும் எனக்குக் கிடையாது. தார்மீக நோக்கிலோ, குற்றம் என்று கூறும் சட்ட நோக் கிலோ நான் அதை ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. அதை நான் வெறுமனே வாழ்வின் ஒரு அம்சமாக - இன்று இருக்கின்ற, நேற்று இருந்த, திகழ்காலத்தில் திட்டமிடப்படுகிறவற்றைப் பார்க்கினும் ஆழ்ந்த உறுதியான மாறுதல்கள் ஏற்படாதவரையில், நாளேக்கும் இருந்தே தீரக்கூடிய ஒரு அம்சமாகத்தான் - கவனிக்க வேண்டும். எந்த ஒரு பிஸினசும் * ஸ்ப்ளே அன்ட் டிமாண்ட் என்கிற நியதியைப் பொறுத்தே செயல்படுகிறது. வாடிக்கைக்காரர்கள் இல்லே என்ருல், நிச்சயமாக விபசார விடுதிகளும் இல்லேதான். காமத்தினவைத் தணித்துக்கொள்வதற் காக ஆண்கள் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதளுல் தான் விபசாரமும் வாழ முடிகிறது. மனிதர்கள் பணம் கொடுத்துப் பெற விரும்புவது எதுவாக இருந் தாலும் சரியே. ; அது அவர்களுக்குக் கிடைக்கும்படி கவனிப்பதற்குச் சிலர் தயாராகவே இருப்பர்.?? -
  • விபசார விடுதிகள் எல்லாம் - சென்று காலத் தில் இருந்தனவும், இன்று இருப்பனவும் - அவை எங்கே இருந்தாலும் சரிதான் - மனிதனுக்கு இயற்கை யாக உள்ள ஒரு பசிக்கு உரிய உணவை அளிப்பதற் காகவே வாழ்கின்றன. வயிற்றுக்கு உணவு அளிக்கக்