பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அது எளிதில் புரியாது என்று சொல்கிருர்களே? அதை விளங்க வைப்பதற்காக அநேகர் கீ (Key) பல எழுதியிருக்கிருர்களாமே?’ என்று கேட்டேன்.

  • ஊம் ஊம்’ என்ருர் நண்பர்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் சொன்ன அபிப்பிராயத்தை நான் அறிவிக்கவும், க. நா. சு. சொன்னர்: உண்மை யிலேயே தகுதியான புத்தகம் என்ருல், அதற்காக வாழ் நாள் பூசாவையும் செலவு செய்யலாமே. வாழ்வு முழு வதையும் செலவிட்டு ஒரு புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ருல், அதற்குரிய தகுதி அந்தப் புத்தகத்துக்கும் இருக்க வேண்டுமல்லவா? உண்மையிலேயே உயர்ந்த நூலானல், அதற்காக நம் வாழ்வை தாராளமாகச் செலவு செய்யலாம்!”

அது எவ்வளவுதான் உயர்ந்த நூலாக இருந்த

போதிலும், அதை மட்டுமே படித்துக் கொண்டிருப்பதில்

என் வாழ்நாளைச் செலவிட நான் ஆசைப்பட மாட்டேன்.

தங்கள் தங்களுடைய மத நூலே மட்டுமே படித்துப் புரிந்துகொள்வதில் வாழ்வை அர்ப்பணிப்பதே சிறந்த செயல் என்று மதவாதிகள் கூறுகிருர்கள். மதவாதி களின் வெறிக்கும் குறுகிய நோக்குக்கும்-அளவிலும் தரத்திலும்-சற்றேனும் பின்னிடாத தமிழ்ப் பண்டிதர் களில் சிலர் திருக்குறளை மட்டுமே படித்துக்கொண்டிருந் தால் போதும் என்கிருர்கள்......

இதெல்லாம் அவரவர் மனப்பண்பையும் அறிவுப் பசியையும் பொறுத்து அமையும்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலேளிஸ்’ எனும் பெரிய நாவலை எழுதி, இலக்கிய உலகத்தில் புதுமையை ஸ்தாபித்தான்,