பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பரபரப்பை உண்டாக்கினன்; தனக்கெனத் தனி இடம் பெற்றுக்கொண்டான்,

‘யுலேஸிஸ்’ என்ற நாவல் பெரியது. அளவிலும் தரத்திலும்தான். ஒரு மனிதனின் ஒருநாள் வாழ்க் கையை-அவனுடைய செயல், எண்ணம், ஏக்கம், உயர்ந்த சிந்தனை, தரக்குறைவான நினைப்பு, அவன் சந்திக்கிற நபர்கள் பற்றி எல்லாம்-அழகாகவும் இலக் கிய அழுத்தத்தோடும் சித்திரிக்கிருன் அதில். அந்த நாவலில் ஆபாசம் அதிகமாக இடம் பெற்றுள்ளது. என்று தடை விதிக்கப்பட்டதும், வழக்கு தொடரப்பெற்.

றதில் நீதிபதி அளித்த தீர்ப்பும் சரித்திரம் ஆகும்.

அயர்லாந்தைச் சேர்ந்த ஜாய்ஸ், டப்ளின் நகர வாசிகளைப்பற்றி எழுதியுள்ள புத்தகம் டப்ளினர்ஸ்’ என்பது. ஜாய்ஸின் சிறுகதைகள் அவை. பார்க்கப் போனுல் அவை கதைகளே அல்ல. தமிழ் நாட்டுப் பத்திரிகை ஆசிரியர்கள், ரசிக சிகாமணிகள் நோக்கிலே கவனித்தால் அவை கதையுமல்ல, கட்டுரையுமல்ல, ஒண்ணுமேயில்லை?! டப்ளின் நகர மக்களின் வாழ்க் கையை,-அவர்கள் பேச்சு, செயல் முதலியவற்றைவிரிவாகச் சொல்கிற ரிப்போர்ட்டேஜ் அது.

'உணவு விடுதியில் ஐவி டே" ("ஐவி டே அட் தி இன்’) என்ற கதை இக் கூற்றுக்கு நல்ல உதாரணமாக அமையும். . -

தேர்தல் காலம். மழையும் குளிரும் அதிகமான நாள். உணவு விடுதியில் சிலர் இருக்கிருர்கள். தேர்த லில் போட்டியிடும் பெரியவர் ஒருவருக்காக உழைக்கும் பிரசாரகர்கள் அவர்கள். வாக்காளர்களின் பண்பு, தேர்தல் நிலை, கட்சிகளின் போக்கு, இங்கிலாந்து மன்னர் பற்றி எல்லாம் மனம் விட்டுப் பேசுகிருர்கள். அவ்வப்போது ஒன்றிருவர் வருவதும், போவதும், குடிப்