பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகவும் தோன்றியவற்றை தமிழ் ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி எழும்.

என் அருமை நண்பர் விஜயபாஸ்கரன் லட்சிய வேகத்தோடும், இலக்கிய ஆர்வத்துடனும் சரஸ்வதி: என்ற மாசிகையை நடத்தி வந்தபோது, அதில் ‘உதிரிப் பூக்கள்’ எனும் தலைப்பில் பலரகமான விஷயங்களைப் பற்றியும் எழுதினேன். அவை இலக்கியப் பிரியர்களின் ரசிப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய விருந்து ஆயிற்று. இதர பத்திரிகாசிரியர்களின் கவனிப்புக்கும் இலக்கா யிற்து. அதனுல் சாந்தி புதுமை தாமரை” ஆகிய பத்திரிகைகளிலும் நான் படித்த புத்தகங்களைப்பற்றி எழுத நேர்ந்தது.

நல்ல எழுத்துக்களைத் தேடிப் பிடித்து, புத்தகங்க களாக வெளியிடுவதில் ஆர்வமும், இலக்கியத்தில் ஈடு பாடும் கொண்டுள்ள நண்பர் மாசிலாமணி எனது கட் ரைகளைத் தொகுத்து, புத்தக உருவம் கொடுக்க முன் வந்தது மகிழ்ச்சிக்கு உரியதாகும். எனக்கு மாத்திரம் அல்ல. இலக்கியப் பிரியர்கள் பலரும் மகிழ்ச்சியோடு வரவேற்கக் கூடிய ஒரு முயற்சி இது.

இப் புத்தகம் உலக இலக்கிய நயங்களே, முதல்தர சிருஷ்டிகளிலிருந்து தேர்ந்தெடுத்த மணிகளை, அறிமுகம் செய்கிறது என்று நான் சொல்லமாட்டேன். ஆணுல், தான் ரசித்த பல நயங்களை, எனக்கு நல்லதாகத் தோன்றிய சில சிறப்புக்களே, பிறரும் ரசிக்கக் கூடிய முறையில் சுவையாக எடுத்துச் சொல்கிறது. இது. இதில் உள்ள ஒரு சில கட்டுரைகளைப் படித்தாலே போதும்; இந்த உண்மை தெளிவாகும்.

5ীগুঞ্জ স্ট্রক্স வல்லிக்கண்ணன்