பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வதில்லை. அதற்கும் எவ்வளவோ பயிற்சிகள், கட்டுத் திட்டங்கள், பணச் செலவுகள்!

மனிதரை பீரங்கித் தீனியாக மாற்றுவதற்கு முத்தி, அவர்களிடம் மனிதத் தன்மை கொஞ்சம்கூட. இல்லாதவாறு நசுக்கி வறளடிக்கும் திருப்பணியைத் தான் ராணுவ முறைகள்-ஒழுக்க விதிகளும், கண்டிப் பான கட்டுப்பாடுகளும்-நிறைவேற்றி வைக்கின்றன.

யுத்த தேவதைக்குத் தீவனமாக மாறத் தயாராகி விடுகிற மனித உருவங்கள் இயந்திரங்கள்போல்செயல் புரிந்தபோதிலும், அவர்களுடைய மனம் சும்மா ஒடுங்கி விடுவதில்லை. மனக்குறளி அதன் வேலையை ஒழுங் கசகச் செய்து கொண்டுதானிருக்கும்!

மனிதனின் தனித்துவத்தை அழிக்க முயலும் நாகரிக அமைப்புகள் பலவற்றினுள் மிக முக்கியமானது. ரானுவம். கொல்லுவதற்கும் கொல்லப்படுவதற்கும் ஊட்டம் கொடுத்து வளர்க்கப்படும் மனிதர்களை அடி மைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்குத் தேவையான விதிகளையும் உருவாக்கி வைத்திருக்கிருர்கள் பதவியில் இருப்பவர்கள். - :

மேலிடத்து ஆசாமிகளின் சிறுமைப்புத்தி, பேரரசை, பொருமை முதலிய பண்புகளையும், ராணு வத்தில் சேர்ந்தும் தனித்துவம் கெடாமல் போராடிப் பொருமுகின்ற சில நபர்களின் வாழ்க்கையையும் அழுத்தத்தோடு-புதுமையாகவும், நயமாகவும்-சித்தி ரிக்கும் நாவல்கள் உலக இலக்கியத்தில் பல உள்ளன. டால்ஸ்டாயின் டேல்ஸ் ஆவ் லெபஸ்டப்போல்”, ஜேம்ஸ் ஜோன்ஸ் எழுதிய ஃப்ரம் ஹியர் டு எட்டர்னிட்டி’, நார்மன் மெய்லரின் தி நேக்கட் அண்ட் தி டெட் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக் ఛ్ 5:5}