பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

படி இல்லை ?’ என்ற கேள்விகளே ஆராய்ச்சிக்கு அஸ்திவாரமாகும். -

ஜேம்ஸ் வாட் என்ற சிறுவன் அடுப்பு மீதிருந்த கெட்டிலில் கொதிக்கும் நீரையும், நீராவியின் சக்தியை யும் வேடிக்கையாகப் பார்த்தான். அற்புதமாகத் தோன்றிய அது ஏன் இப்படி நடக்கிறது?’ என்று சிந்திக்கும்படி அவனைத் தூண்டியது...அதை ஒட்டிய வரலாறுதான் உங்களுக்குத் தெரியுமே!

நியூட்டன் பற்றி நீங்கள் அறிவீர்கள். மரத்தடி யில் அமர்ந்திருந்தார் அவர். மேலே இருந்து ஒரு பழம் விழுந்தது அதை எ டு த் து அவர் தின்று. விட்டோ, அல்லது இப்படி விழுவது தான் பழத்தின் இயல்பு’ என்று எண்ணியோசோம்பி இருந்திருப்பின் அவரைப் பற்றி நீங்களும் நானும் அறிந்துகொண்டிருக். கவே முடியாது. ஏன் இந்தப் பழம் கீழே விழ வேண் டும்? மரத்திலிருந்து பிரியும் பழம் ஏன் மேல் நோக்கிப் போகக் கூடாது? மேலே வீசி எறியப் படுகிற பொருள் தரைக்கே திரும்புவது ஏன்?’ என்றெல்லாம் சிந்தனைக்கு. வேலே கொடுத்தார். அறிவுலகம் லாபம் அடைந்தது.

இந்த விதமாக எத்தனையோ பேர் ஏன்? ஏன்? என்று கேட்டு, விளக்கம் காண முயன்று போராடியத. குல்தான், துறைதோறும் புதுப் புது அற்புதங்கள் பிறந் துள்ளன. புற உலக இருட்டும், மனித அறிவில் படிந்த இருளும் அகன்று, ஒளி பரவ வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றன.

"வானத்துச் சந்திரனுக்கு வடமுனை உயர்ந்திருந்: தால் என்ன! தென்கோடி தாழ்ந்து கிடந்தால் நமக்கு என்ன!’ என்று பேசிவிட்டு, திண்ணையில் படுத்துத் தூங்குவதில் ஆர்வம் காட்டிய பெரியவர்கள் அறிவு: வளர வகை செய்யவில்லை. ஏன், எப்படி, எதல்ை,