பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இப்போதெல்லாம் அறிவு வளர்ச்சிக்காக அனைத் தையும் படித்தாக வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இல்லை. பரீட்சைக்குப் படிக்கிறவர்கள்’ பாடங்கள் முழுவதையும் படிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நோட்ஸ்’ என்று கிடைக்கிற சுலப வழிகளைப் பின்பற்றுவதில்தான் ஆர்வம் மிகுந் திருக்கிறது. அவற்றிலேகூட, முக்கியம்-மிக முக்கியம் என்று சிலர் சொல்லும் பகுதிகளை மாத்திரம் படித்தால் போதும் என்ற மனுேபாவமும் மாணவர்களிடையே வளர்ந்துவிட்டது. 3 *

பரீட்சைகளில் பெறுகிற மதிப்பு எண்கள் முக் கியமானவைதான். ஆயினும், அவற்றைவிட அதிக மான மதிப்பு உடையது அறிவு அபிவிருத்தி, ફ્રેં

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’ என்று ஒரு கவிஞர் கூறுகிருர். இதுவே ஒவ்வொரு மாணவனின் குறிக் கோளாக அமையுமானல், எவ்வளவு சிறப்பாக இருக் கும் மனித வாழ்வு எத்துணை மாண்புடையதாகும்!

"எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ண வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்.'

- பாரதியார்.