பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 :

ஒன்று தெய்வப் பண்பு. மற்றது அசுர குணம். இப்படி பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. உண்மையில், ஒவ்வொருவர் உள்ளும் இரண்டு பண்புகள் அல்ல, பலப்பல சுபாவங்கள் பதுங்கிக் கிடக்கின்றன என்றே சொல்லவேண்டும். ஆளுக்குள்ளே ஆளு, எத்தனையோ ஆளு!’ என்பது சரியான கூற்று. ஒவ்வொருவனேயும்ஒவ்வொருத்தியையும்-ஒவ்வொரு குழந்தையையும் கூட, நன்கு கவனித்து வந்தால், வெவ்வேறு சமயங் களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் யார் யார் எப்படி எப்படி நடந்து கொள்கிருர்கள் என்று கூர்ந்து நோக் கிகுல், இதன் உண்மை நன்கு புலனுகும்.

புகழ்பெற வேண்டும்-பிறரது பாராட்டுதலைப் பெற வேணும்-எனும் ஆசை பெரிய பெரிய காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. அவ்வாறு செயல் புரிவதற்குப் போதுமான திராணியும் துணிச்சலும் இல்லாமல் போளுல்-தேவையான வாய்ப்புகளும் வசதிகளும் கிட்டாமல் போகுமானுல்-அந்த ஆசை மனிதரை வெறும் அளப்புகளில் மூழ்கிக் களிப்புறும்படி செய்கிறது. தனது பேச்சைக் கேட்கவோ-சொல்வதைக் கேட்டு நம்புவதற்கோ-ஆள் இ ல் ல | ம ல் போகுமால்ை, தன்னிலே தானே ஆழ்ந்து, கனவுகளை வளர்க்கும்படி தட்டிக் கொடுக்கிறது மனித மனம்.

தூக்கத்தில் மட்டும்தான் மனிதன் கனவுகளை வளர்க்கிருன் என்றில்லை. விழிப்பு நிலையிலும் ஆசை யோடு கனவுகளை வளர்க்கிருன், பகற்கனவு, ஆகாசக் கோட்டை என்றெல்லாம் சொல்லவில்லையா? அதே தான.

கையாலாகாத்தனமும், நிகழ்கால வறட்சியும், எதிர்காலம் நன்ருக அமைய வேண்டும் என்ற ஆசையும் ஆகாசக் கோட்டை கட்டத் தூண்டு கின்றன.