பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அல்நாஷர் என்கிற கண்ணுடி வியாபாரியின் கதையும், பால்காரி ஒருத்தியின் கதையும் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அல் நாஷர் என்பவன் ஒரு சோம்பேறி. சின்ன வயசில் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போனதில்லே; பாடம் படித்ததில்லை. பிறகு வேலே செய்து உருப்படக் கற்றுக் கொள்ளவுமில்லே. தனது நிகழ்கால வறுமைக்கு தன் னுடைய அப்பன்தான் காரணம் என்று குறை கூறலா ஞன். துள்ளித் திரிகின்ற காலத்தே எந்தன் துடுக் கடக்கி, என்னைப் பள்ளிக்கு வைத்திலனே தந்தை. யாகிய பாதகனே!’ என்று ஏசிக்கொண்டிருந்தான். பிழைப்பு நடத்த வேண்டுமே? யாரோ சொன்னர்கள் என்று, கண்ணுடிப் பாத்திரங்களை வாங்கி, ஒரு கூடை யில் வைத்துக் கொண்டு, தெருத்தெருவாகச் சுற்றி வியாபாரம் செய்ய முன் வந்தான் அவன்.

பல தெருக்களைச் சுற்றிய பிறகு, சோம்பேறித். தனம் குரல் கொடுத்தது. ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அவன் மனம் வேலை செய்தது. அவன் காலடியிலிருந்த கூடையைப் பார்த்தபடியே, மனக் கோட்டை கட்டினன். இவ்வளவையும் விற்றுவிட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும்; மீண்டும் பாத்திரங்கள் வாங்கி அதிக லாபத்துக்கு விற்ருல் எப்படிப் பணம் சேரும் என்றெல்லாம் கணக்குப் பண்ணிஞன். நிறைய பணம் சேர்ந்ததும் அல் நாஷர் பெரிய மாளிகை கட்டிக் கொள்கிருன். சுகபோக வாழ்வைத் தொடங்குகிருன். அவனது செல்வத்தையும் பெருமையையும் பற்றி அறிய நேர்ந்த அரசன் தன் மகளே அவனுக்கு மணம் முடித்து வைக்கிருன். இளவரசியோடு இன்ப வாழ்வு நடத்து கிருன் அவன். ஒரு நாள் ஊடல் எழுகிறது. அவளோடு கோபித்துக் கொள்கிருன். அவள் அவன் காலடியில் விழுந்துகெஞ்சுகிருள். ராசா மகளாக இருந்தால் நமக் கென்ன ! போடி கழுதை என்று எட்டி உதைப்பேன்’