பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t;3

புரிந்தான். தனது பையன்களை ஒருவர் பாக்கி விடாமல் தின்று தீர்த்தான்.

ஆனல், அம்புலி தன் பெண்களை விழுங்கவில்லை. எல்லோரையும் ஒரு பெரிய கூடையைப் போட்டு மூடி வைத்தாள். அவர்களை ஒழித்துக்கட்டி விட்டதாகத் தன் புருஷனிடம் சொன்னாள். .

அந்தி வந்தது. அவ்வளவுதான். வழக்கப் பிரகாரம் ஒவ்வொரு மகளாய் குதித்து வந்தாள். கூடையைத் திறந்து கொண்டு எல்லா மகள்களும் வந்து விட்டதை சூரியன் பார்த்தான். அவனுக்குப் பொல்லாத கோபம். இவள் நம்மை ஏமாற்றிவிட்டாள், பார்த்தாயா என்று. அவன் கைத்தடியை வேகமாக ஓங்கிக் கொண்டு, அம்புலியின் மண்டையில் போடுவ தற்காகப் பாய்ந்தான். . . .

அவள் நடுங்கி விலவிலத்துப் ப்ோளுள். அவனை சமாதானப் படுத்தும் வகையில் அவனுக்கு தன் மகள் களில் இரண்டு பேரை கொடுத்தாள். சூரியனும் திருப்தி அடைந்தான். -

சூரியன் அம்புலி இருவர் குழந்தைகளைத்தான் மனிதர்கள் நட்சத்திரங்கள் என்று குறிப்பிடுகிருச்கள். சூரியன் தன்னைக் கொன்று போடுவானே என்று பயந்து நடுங்கி, அம்புலி அவனுக்கு அளித்த இரண்டு குழந்தை களும் இன்னும் அப்பாவுக்குப் பணிவிடை செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஒன்று சூரிய உதயத் துக்கு முந்தியும், மற்றது சூரிய அஸ்தமன சமயத்திலும் தந்தைக்கு உதவுகின்றன.

இந்தச் சண்டை ஏற்பட்டதிலிருந்து, சூரியனும் அம்புலியும் ஒன்று சேருவது கிடையாது. அதனல்,