பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 :

அவரது சிரிப்பு ஒசையே இல்லாதது போன்றது- விசே வடிமான ஏதோ ஒரு கவர்ச்சி பெற்றிருந்தது. சிரிப்பதில் அவர் உண்மையான ஆனந்தம் அடைவதுபோல் தோன்றும். ஆபாசக் கதைகள் அவருக்கு சிரிப்பு அளிப்பது கிடையாது’ என்கிருர் கார்க்கி,

ஆளுல், மாபெரும் புகழ்பெற்ற டால்ஸ்டாய் இருந் தாரே, அவருக்குக் கொச்சைப் பதங்களும் பச்சையான பேச்சுகளும் அதிகம் பிடிக்குமாம். அவருக்கு பெண் களைப்பற்றி - அதுவும், ரஷ்யக் குடியானவனின் முரட் டுத் தன்மை கலந்தவிதத்தில் பேசுவதில் ஆசை அதிகம்.

எழுத்தில் சொல் ஜாலங்கள் செய்வதை டால்ஸ் டாய் ஆதரித்ததில்லை. கார்க்கி எழுதிய அகலபாதன் ளம்’ என்கிற நாடகத்தில் சில பகுதிகளே வாசிக்கக் கேட்டதும், டால்ஸ்டாய் அதுபற்றி விசாரித்தாராம். கார்க்கியின் விளக்கங்களை அறிந்துகொண்டதும், அவர் சொன்னது இது- -

"நீ இளஞ்சேவல் மாதிரிச் சாடுகிருய். இன்னு மொன்று - இயல்பாக உள்ள வெடிப்புகள், பிளவுகள் மீதெல்லாம் உனது சொந்தச் சாயத்தைப் பூசிமறைக்கப் பார்க்கிருய். மேல்பூச்சு அழிந்துபடும்; உண்மையான தோல் பல்லிளிக்கும் என்று ஆண்டர்சன் ஒரு கதையில் சொல்கிருர், எல்லாம் போய்விடும், உண்மை மட்டுமே நிலத்து நிற்கும் என்று நம் குடியானவர்கள் சொல்வார் கள். பூசி மெழுக ஆசைப்படாதே, அது உனக்கு நன்மை தராது. மேலும் உனது பாஷை அதிகத் துள் ளலும் பெற்று, பல ஜாலங்கள் நிறைந்து காணப்படு கிறது, இது சரிப்படாது. நீ மிக எளிய முறையில் எழுத வேண்டும். மக்கள் எப்பொழுதும் எளிய தன் மையில்தான் பேசுகிருர்கள். அவர்கள் தங்கள் கருத்தை நன்ருகவே எடுத்துச் சொல்கிருர்கள்.

6