பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

‘நான்கு வந்து மூன்றைவிடப் பெரிதாக இருக்கின்ற போது, மூன்றிலொரு பங்கு நான்கில் ஒரு பகுதியை விட அதிகம் என்ருவது எப்படி ?’ என்று எந்தக் குடியானவனும் கேட்பதில்லை? ஆனல் படித்த இளம் சீமாட்டி ஒருத்தி இப்படிக் கேட்டாள். எழுத்தில் தந்திர வித்தைகளுக்கு எவ்வித அவசியமும் கிடை யாது!’

மாக்ஸிம் கார்க்கி தமது அனுபவங்களே ஒளிவு மறைவு இல்லாமல் எழுதியிருக்கிருர், லிட்டரரி போர்ட் ரெயிட்ஸ் (இலக்கியச் சித்திரங்கள்) என்ற நூலில். டால்ஸ்டாய், அவர் மனைவி, செகாவ், கொரலங்கோ, அவர்கள் கால எழுத்தாளர்கள் - பிரபலஸ்தர்கள் பற்றி எவ்வளவோ உண்மைகளை உணரமுடிகிறது. இதிலி ருந்து. கார்க்கியின் இலக்கியச் சித்திரங்கள் ரசனைக்கு இனிய விருந்துமட்டுமல்ல; சிந்தனைக்கு நல்ல தூண்டு தலும் ஆகும். அறிவுப்பசி உடையவர்கள் அவசியம் படித்தாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.