பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடிக் கதை

ஒரு கதை. நாடோடிக் கதை. உங்களுக்கும்

தெரிந்திருக்கும்.

ஒரு பிள்ளையார் அரசமரத்தடியில் வீற்றிருந்தார். உழவன் அவரைச் சுற்றிவந்து விழுந்து கும்பிட்டான். பிள்ளையாரப்பா, பயிரெல்லாம் கருகுகிறது. இன்ருவது மழை பெய்யட்டும். இன்று மழை பெய்தால்தான் ஏதோ கொஞ்சமாவது தலையெடுக்கும்’ என்று பிரார்த் தித்தான். அவன் போய் சிறிது நேரம் சென்றபிறகு, ஒருவன் வந்தான். இவனும் பக்தி சிரத்தையோடு கும்பிட்டான், சாமி கடவுளே! இன்று மழை பெய்யப் படாது, கண்டிப்பாக மழை இன்று வேண்டவே வேண்டாம். இந்த ஊரில் நான் கூத்து நடத்தப் போகிறேன். இன்று மழையை அனுப்பி என் பிழைப் பைக் கெடுத்துவிடாதே பிள்ளையாரே என்று கும்பிட்டான்.

பிள்ளையாரப்பன் பாடு தர்ம சங்கடமாகத்தான் இருந்திருக்கும். இதுபோல் நேர்மாருண வேண்டுதல். களே கேட்டுக்கேட்டு யாருக்குத் துணைபுரிந்து அருளு. வது என்று குழம்பி, எவருக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் பிள்ளையார் வகையராக்கள் கல்லாகச் சிலையாக உட்கார்ந்து விட்டார்கள் என்று என் மனக்குறளி அடிக்கடி குரல் கொடுப்பது உண்டு.

இதே மாதிரிச் சுவையான கதை ஒன்றை நான் படித்து மகிழ முடிந்தது. ரொம்பவும் ரசமான கதை தான். சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த கதை.