பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப் பசியன்

இலக்கிய உலகத்தின் இமயப் பெரும் சிகரம் லியோ டால்ஸ்டாய். மனித உலகத்தின் தன்மை களேயும் தவறுகளையும், பெருமைகளையும் சிறுமை களையும், மனித வாழ்க்கையின் பலதரப்பட்ட சித்திரங் களையும், மனிதர் உள்ளத்தின் ஆழத்தையும், உணர்வு களின் சுழற்சிகளையும் சூறைகளையும் அவர் அழகா கவும் அற்புதமாகவும் எழுத்தாக்கியிருக்கிருர், போரும் அமைதியும்’ எனும் அவரது மகத்தான நாவலிலும், மற்றுமுள்ள நாவல்களிலும் விந்தை மனிதர் பலப் பலரின் வேடிக்கையான போக்குகளை அவர் பதிவு செய்திருக்கிருள். அன்பு, ஆன்மீக உயர்வு, லட்சிய, வாழ்வு முறை முதலியவைகளைத் துதி பாடுவதற் கென்றே அவர் எழுதி வைத்த கதைகளிலும் வேடிக் கையான பாத்திரங்களே அறிமுகம் செய்திருக்கிருர்.

‘இந்த மனிதனின் காம்பீர்யம்தான் என்ன! அவ ருடைய ஆத்ம பலத்தின் ஆச்சர்யகரமான சக்திதான் என்ன! எல்லாம் அற்புதமானவை. அவரைப் போன்ற இன்ஞெருவர் வாழ்வது சாத்தியம் எனத் தோன்ற வில்லை என்ற எண்ணமே நமக்கு எழும், அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கில்ை!” என்று மாக்ஸிம் கார்க்கி டால்ஸ்டாய் குறித்து வியந்து எழுதியிருக்கிருர்.

அத்தகைய மகத்தான ஆற்றல் பெற்ற டால்ஸ்டாய். படைத்து விளையாடவிட்டு, கண்டுகளித்து, நமக்கும் வேடிக்கைப் பொருளாய் திகழச் செய்துள்ள அதிசய சிருஷ்டிகளுள் அருள் தந்தை ஸெர்ஜியஸ் (ஃபாதர் ஸெர்ஜியஸ்) ஒன்று ஆகும்.