பக்கம்:முத்துச் சிப்பி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 I

பட்டிருக்கலாம். பஞ்சமும் பிணியும் கொஞ்சமாவது குறைந்திருக்கும். பெண்கள் இன்பமாக வாழ்வார்கள் ான்றெல்லாம் நினைத்தாள். தெருவிலே விளக்கேற்றி விட்டார்கள். கோவிலிலிருந்து மணியின் நாதம்

கெட்டது.

'பவானி கால் கடுக்க அரை மணியாய் நிற்கிறாயே? நாளைக்குத் தான் நீ ஊருக்குப் போகிறாய், திரும்பி வர இன்னும் எத்தனை மாசங்கள் ஆகுமோ? உள்ளே வந்து

கா ரேன் என்று பார்வதி அவளை அழைத்தாள்.

20. மூர்த்தியின் ஏமாற்றம்

பசுமலை ரயில் நிலையத்துக்குப் பாசஞ்சர் வண்டி லை பத்தரை மனிக்கு வருவது வழக்கம். சாதா | ணமாகவே பத்தரை மணி வண்டி. பன்னிரண்டு மணிக்குத் தான் வரும். பத்தரை மணி வண்டியைப் பிடிக்க ரயிலடிக்குப் பதினென்றரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் .ே ப ா து ம என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்,

பார்வதி, பவானி- பாலுவிற்காகச் சிறந்த விருந்து ஒன்று தயாரித்தாள். பரிந்து பரிந்து உபசரித்தாள். பவானியின் மனநிலை விருந்துண் ணும் நிலையில் இல்லை. கோமதியின் உடல் நிலை எப்படி இருக்கி றதோ என்று கவலைப் பட்டுக் கொண்டே யிருந்தாள்.

அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவ்வளவு பெரிய நகரத்தில் வைத்தியர்களுக்கும் அவர்கள் திறமைக்கும். பஞ்சமா என்ன? நிதானமாகச் சாப்பிடு' என்று உபசரித்தாள் பார்வதி.

பாலு, ஊரில் ஒரு பையன் பாக்கியில்லாமல் தான் சென் னைக்குப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.

மு.சி-7