பக்கம்:முத்துச் சிப்பி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.3

நாடி வந்தாலும் என் வீட்டிற்கு வரலாம்’ ’ என்றார் அவா .

பவானி பேச முடியாமல் திணறினாள். பார்வதியை | பெருகும் விழிகளால் பார்த்தாள். மாமி’ என்று அழைக்கிறவள். "அம்மா’ என்று கூப்பிட்டாள். அவளை

அப்படியே அணைத்துக் கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள்.

"பவானி பைத்தியம், பைத்தியம், ஏன் இப்படி அழுகிறாய்?' என்று பார்வதி அவளைத் தேற்றினாள்.

'இந்த மாதிரி மாசில்லாத அன்பை நான் சென்னை யில் எங்கே பார்க்கப் போகிறேன்?’ பவானி அழுது கொண்டே பார்வதியை இவ்விதம் கேட்டாள்.

'நீ பைத்தியம் தான் போ! உன் மனசிலே அன்பு நிறைந்திருக்கும்போது பிறத்தியார் உள்ளத்திலும் அன்பு தான் நிறைந்திருக்கும். உன்னை வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்றாள் பார்வதி. பிறகு இருவரும் அழுகையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு மூட்டை முடிச்சுக்களை வண்டியில் ஏற்றுவதற்கு முனைந்தனர்.

'ரயிலடிக்கு நானும் வருகிறேனே"' என்று கல்யாணம் அவளைக் கேட்டார்.

‘'வேண்டாம், மாமா! ஊருக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை. இன்று தான் தலைக்கு ஜலம் விட்டுக் கொண்டீர்கள். அலைய வேண்டாம்” என்று பவானி தடுத்து விட்டாள்.

பாலு மட்டும் உற்சாகத்துடன் இருந்தான். புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்கிற களிப்பு அவன் முகத்தில் படர்ந்திருந்தது.

வண்டி தெருக்கோடியைக் கடந்து பசுபதி கோவி லைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தது.