பக்கம்:முத்துச் சிப்பி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 5

டிக்கெட்தான் வாங்கியாகி விட்டதே நீங்கள் போங்கள் என்று மூர்த்தியிடம் சொல்லப் பவானிக்குத் தைரியமில்லை.

பாலு நீ இனிமேல் அங்கேதானே படிக்கப் போகி றாய்?' என்று பேச்சை ஆரம்பித்தான் மூர்த்தி.

"ஆமாம்! மாமா... எங்க மாமாவுக்கு கார் இரு கிறது. மாமா பெண் சுமதிக்கு ரிக்ஷ இருக்கிறது. எதில் வேண்டுமானாலும் பள்ளிக் கூடம் போகலாம்’ ’ என்றான் பாலு பெருமை தொனிக்க.

பேசாமல் இரு டா! நீயும் உன் பெருமையும் என்று அதட்டினாள் பவானி.

சொல்லட்டும். அ.ெ ைன அதட்டாதீர்கள் 1’ ’ என்றான் மூர்த்தி புன் முறுவலுடன். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவனாக, 'அந்தக் கிழவர் சீர்திருத் தவாதிகளைப் பற்றிக் கேலி பண்ணினாரே, இவரை யார் பேசச் சொல்லிக் கூப்பிட்டார்கள்? என்று பழைய கதையைக் கிளப்பினான்.

"அவருடைய அபிப்பிராயம் அவ்விதம் இருந்தது. அதைச் சரியென்று எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே! ' என்றாள் பவானி.

இன்று நீங்கள் ரயிலுக்குக் கிளம்பிய பிறகு என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு, மாமாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டார். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? என்று கேட்டான் மூர்த்தி.

என்ன நடந்தது? என்று தன் அகன் ) விழிகளை கல விழித்துக் கேட்டாள் பவானி.