பக்கம்:முத்துச் சிப்பி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O 6

ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. பயந்து விடாதீர்கள். மாமா என்னைக் கூப்பிட்டு என் ஜாதகத்

தைக் கேட்டார்.

ஜாதகத்தை எடுத்து வந்து அவர்கள் எதிரிலேயே கிழித்துப் போட்டேன்! எனக்கு இதிலெல்லாம் நம் பிக்கை இல்லை. நான் சீர்திருத்தவாதி. சீர்திருத்த மனம் செய்து கொள்ளப் போகிறேன்' ' என்றேன்.

பார்த்தாயாடா கல்யாணம்?' என்று ஆரம்பித் தார் கிழவர்.

பார்க்கிறது என்ன சார் . பார்க்கத் தான் போகி றிர்கள். ஜாதி விட்டுக் கலியாணம் பண்ணிக் கொள் கிறது ஒரு விதமான சீர்திருத்தம். நம் நாட்டிலே வாடும் ஆயிரக் கணக்கான விதவைகளை மறுமணம் செய்து கொண்டு வாழ வைப்பதும் ஒரு சீர்திருத்தம்தான். நான் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டாலும் நீங் கள் ஆச்சரியம் அடைய வேண்டாம் என்றேன்' என்று கூறி முடித்தான் மூர்த்தி.

ரயிலடி நிசப்தமாக இருந்தது. அங்கே அன்று கூட். டமே இல்லை. பவானி பற்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். பாழும் ரயில் சீக்கி ரம் வராதா என்று வேதனைப் பட்டாள். இந்த அதிகப் பிரசங்கியின் பேச்சிலிருந்து விடுபட்டு எப்பொழுது ரயில் ஏறுவோம் என்று ஆத்திரப்பட்டாள். வாழ்க்கையில் நேர்மையைப் பற்றி அறியாதவர்கள் முதலில் தன் வாழ்க்கையைச் சீர்திருத்தம் பண்ணிக் கொண் டல்லவா சமூகத் தொண்டு என்கிற புனிதமான சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும்? சே! இவனைப் போய் ரயிலடிக்கு அனுப்பினாரே கல்யாணம் மாமா என்று வேதனை பொங்க பொழுது ஒரு பாரமாய் உட்கார்ந்திருந்தாள் பவானி.