பக்கம்:முத்துச் சிப்பி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 W

அவுட்டரில் கை காட்டி இறங்கியது. புஸ் புஸ் று பெருமுச்சு விட்டுக் கொண்டே வண்டி வந்து நின் றது. சாமான்களை ஏற்றிவிட்டுப் பாலுவுடன் பவானி பெட்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்குள் கூட்டம் அதிக வில்லை. ஜன்னல் ஓரத் தில் ஒரு பெண் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்னும் சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

'பாலு! போய்விட்டு வருகிறாயா?" என்று கேட் டான் மூர்த்தி.

'நான் வருகிறேன். உங்கள் மாமாவிடமும் மாமி யிடமும் சொல்லுங்கள்' என்றாள் பவானி, வெறுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு.

  • சென்னையில் உங்கள் விலாசம்?' மூர்த்தி கபடமாகச் சிரித்துக் கொண்டே பவானியை இவ்விதம் கேட்டான்.

பவானி துணிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து 'நீங்கள் சென்னைக்குப் போகிறீர்களா?' என்று கேட் டாள்.

அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு ரயில் கிளம்ப விட்டது. ஜன்னல் ஒரத்தைப் பிடித்துக் கொண்டு மூர்த்தி வாடிய முகத்துடன் நடந்து வந்தான். ஜே.பியி லிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். தன் னையே வெறித்துப் பார்க்கும் அவனைப் பார்க்க விரும் பாத பவானி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண் டாள்.

பசுமலையின் கோவில் கோபுரம் தெரிந்தது. அது வும் மறைந்து கொண்டே வந்தது. பவானிக்கு மனத்தில் ஏற்பட்டிருந்த வெறுப்பு அடங்கி வண்டிக்குள் இருந்த வர் களைக் கவனிக்கச் சிறிது நேரம் பிடித்தது.

முதல் பாகம் முற்றிற்று.