பக்கம்:முத்துச் சிப்பி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இருந்தது. இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள்

  • i H ת †. ■ H. விளங்கி விட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.

இவை யெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியை வென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத் துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.

பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம் பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளி தான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன் தோன்றும் விடி வெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண் களுக்குப் பாலுவும் ஒரு விடி வெள்ளியாகவே தோன்றி னான். ஆம் இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.

பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

愛D - 2. பொழுது விடிந்தது

பெ ாழுது பலபல வென்று விடித்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பக க்கள் கட்டியிருந்தன. அன் (D/ வெள்ளிக் கிழமை

யாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள்