பக்கம்:முத்துச் சிப்பி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பாகம்

1. கதம்பச் சரம்

மாலை சுமார் நான்கு மணி இருக்கலாம். தோட்டக் காரன் கோபாலன் கூடை நிறைய ஜாதி அரும்புகளை யும், கனகாம்பரத்தையும் பறித்து வந்து, கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்த பவானியின் முன்பு வைத் தான். வாழை நாரைத் தொட்டித் தண்ணிரில் ஊற வைத்து எடுத்து வந்து கொடுத்தான் . துணுக்கு அப்பால் நின்று கொண்டு, அம்மா' என்று கூப்பிட்டுவிட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். --

பவானி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு ' என்னப்பா வேணும் உனக்கு? என்று கேட்டாள்.

'சின்னக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திலே ருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு செடிகளுக்கு தண்ணி ஊத்தியாச்சு. மாட்டுக்குத் தீனிவைச்சாச்சு' என்று தன் னுடைய வேலைகள் முடிந்து விட்டதை அறிவித்தான் கோபாலன் .

சரி உனக்கு என்ன வேணும் என்று சொல்லேன்?' என்று கேட்டாள் பவானி.

கோபாலன் மறுாடியும் தலையைச் சொறிந் நான். 'வீட்டிலே அது சினிமா பார்க்கணும்னு ஒரு வாரமா கேட்டுக்கிட்டு இருக்குது. சாயங்கால ஆட்டத்துக்குப் போகலாம்னு ...'

'இருக்கிறயாக்கும் சரி எதுக்கும் மாடியிலே போய் அம்மா வைக் கேட்டுக்கோ போ...'