பக்கம்:முத்துச் சிப்பி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 9

இவ்விதம் கூறிவிட்டு, வாழை நாரைக் கிழித்துப் பூ தொடுக்க ஆரம்பித்தாள் பவானி. மாடி அறையிலே அவள் மன்னி கோமதி கோபாலனுக்கு உத்தரவு போடுவது கேட்டது.

"சினிமாவுக்குப் போகிறது இருக்கட்டும். முதலிலே டாக்டர் வீட்டுக்குப் போய் இன்றைக்கு என்னாலே அங்கே வரமுடியவில்லை. அவரையே கொஞ்சம் வந்த பார்த்து விட்டுப் போகச் சொன்னாங்க என்று சொல்லி விட்டு வா' என்றாள் கோமதி. அப்புறம் எதையோ நினைத்துக் கொண்டவளாக கோபாலா! பூப் பறித்து விட்டாயோ? அம்மாவைக் கேட்டு டாக்டர் தங்கச்சிக்கும் மகளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிப் போய்க் கொடு ' என றாள .

கோபாலன் மாடியிலிருந்து கீழே வந்தான். அம்மா, டாக்டர் வீட்டுக்குப் பூ தரச் சொன்னாங்க என்று சோர்ந்த முகத்துடன் பவானியிடமிருந்து பூச்சரத்தை வாங்கி எடுத்துக் கொண்டு டாக்டர் ரீதரனின் வீட்டை நோக்கி நடந்தான். ==

கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் செல்லும் நீளமான தெருவின் கோடியில் இருக்கும் பங்களா டாக்டர் ரீதரனுடையது. வாயில் சுவரில் ஒரு புறத்தில் டாக்டர் பூரீதரன் எம். பி. பி. எஸ். என்கிற பெயரையும், மறுபுறத்தில் ஜெயபூரீ என்கிற வீட்டுப் பெயரையும் காணலாம்.

டாக்டர் வெளியே போகவில்லை. வீட்டில் இருக் கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவருடைய கார் "போர்டிகோ வில் நின்றிருந்தது. ஒன்றிரண்டு நோயாளி களும் வெளிப்பக்கம் தாழ்வாரத்தில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர்.