பக்கம்:முத்துச் சிப்பி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0

கோபாலன் வராந்தாவில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். டாக்டர் பூரீதரன் நோயாளி ஒரு வரைப் பரிசோதனை செய்து கொண்டி (ருப்பது தெரிந்தது. வாசல் பக்கத்திலிருந்து மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. மாடியிலிருந்து மெல்லியதாக ரேடியோ இசை கேட்டுக் கொண்டிருக்கவே மாடிக்குப் போ னான் கோபாலன் .

அங்கே இருந்த சோபா ஒன்றில் பூரீதரனின் தங்கை ராதாவும் பூரீதரனின் மகள் ஜெயபூரீயும் உட்கார்ந்திருந் தார்கள். எதிரில் இருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகை களை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக் கொண்டிருந் தாள் ராதா, கோபாலன் தயங்கிக் கொண்டே ஹாலுக் குள் நுழைந்தான்.

'அம்மா கொடுத்தாங்க என்று சொல்லிவிட்டு, பூச்சரத்தை மேஜை மீது வைத்து விட்டு நின்றான் கோபாலன .

'அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு கோபா லா? பூவெல்லாம் தொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போலி ருக்கே!' என்று கேட்டுக்கொண்டே ராதா பூச்சரத்தை எடுத்துக் கத்தரித்து ஜெயபூரீக்கு வைத்துவிட்டுத் தானும் சூட்டிக் கொண்டாள்.

'அவங்க உடம்பு கொஞ்சம் சுமாருங்க. பூ அவங்க கட்டல் லீங்க. ஊரிலிருந்து ஐயாவோட தங்கச்சி வந்திருக் காங்களே, அந்த அம்மா கட்டினாங்க என்றான் கோபாலன்.

'ஜோாாய்க் கட்டி இருக்காங்க. கனகாம்பர ம், அதன் பக்கத்தில் ஜாதி, அதன் பக்கத்தில் தவனம், அப்புறம் ரோஜா என்று அழகான கதம்பமாகக் கட்டி யிருக்காங்க. நம்ப வீட்டிலேயும் ரகப்பட்ட பூ தான் பூக்கிறது. இந்த மாதிரி எனக்குக் கட்டத் தெரியவில்