பக்கம்:முத்துச் சிப்பி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I I

ா ( ! என்று ராதா, அந்தக் கதம்பச் சரத்தைப் புகழ்ந்து பேசினாள். பிறகு ரேடியோவை மூடிவிட்டு

'நீ எங்கே வந்தே? என்று விசாரித்தாள்.

' 'ஐயாவைப் பார்க்க வந்தேம்மா. அம்மாவுக்கு இன்னிக்கு இங்கே வரமுடியவில்லையாம். ஊசி போட டாக்டர் ஐயாவையே அங்கே வரச் சொன்னாங்க... '

'சரி ஐயா உள்ளே வந்ததும் தகவலைச் சொல்லு கிறேன்' என்று கூறிவிட்டு ராதா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

வெளியிலே இருந்த ஒன்றிரண்டு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு பூரீதரன் உள்ளே வந்தார். கைகளை அலம்பிக் கொண்டு மேஜை அருகில் உட் கார்ந்தார் அவர்.

ஜெயபூரீ மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்தாள்" "அப்பா! அப்பா! உன்னோட நானும் சுமதி வீட்டுக்கு வரேன்” என்று தன் தகப்பனாரைப் பார்த்துக் கேட் டாள் அந்தப் பெண் .

பூரீதரன் மகளைத் தம் அருகில் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டார். ஆசையுடன் அவள் முகத் தைப் பார்த்து , 'ஏனம்மா! நான் "பேஷண் டை ப் பார்க்கப் போனால் நீயும் கூட வருவதாவது?’ என்று கேட்டார் கொஞ்சலாக,

இதற்குள் சமையலறையிலிருந்து தட்டுக்களில் சிற்றுண்டியும் உ'யும் எடுத்துக் கொண்டு சமையற்காரர் சுவாமிநாதன் வெளியே வந்தார். மேஜை மீது வைத்து விட்டுக் குளிர்ந்த ஜலமும கொண்டு வந்து வைத்தார். 'குழந்தை என்ன சொல்கிறாள்?’ என்று கேட்டார்.

'உம் சரி. நீயே கேளு சுவாமியை ! ஒரு டாக்டர் வைத்தியம் பண்ணுவதற்காக நோயாளிகள் வீட்டுக்குப்