பக்கம்:முத்துச் சிப்பி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13

ஒருவர். மாதம் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வரும்படி வந்தது . 1னைவி இறந்து போய் எட்டு வருவுங்கள் ஆகின்றன. மறுமணம் செய்து கொள்ளும் எண்ண மா அதை துண்டி நடத்தி வைப்பவர்களையோ ஒன்றையும் அடையக் கொடுத்து வைக்காதவர் பூரீதரன். உடன் பிறந்த தங்கையும், மகள் ஜெயபூரீயும் தவிர. அவருடைய லட்சியமெல்லாம் வைத்தியத் தொழிலில் இருந்தது. அவருடைய அன்பு மனைவி இறந்து போன பிறகு அந்த லட்சியம் வலுப்பெற்றது. அவளை அடியோடு மறந்து, விட்டு, வேறொருத்தியை மணந்து வாழ விரும்பவில்ல்ை. மண வாழ்க்கையின் சுவையை அவர் நான் கே வருவு:ங்: களில் அனுபவித்து முடித்து விட்டார்.

ஜெயபுரீயின் தாய் பத்மாவுக்கு அழகும். குணமும் ஒருங்கே பொருந்தி இருந்தன. பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டுவந்த சீதனப் பொருள்களில் சுவாமி நாதனும் ஒருவர். பத்மாவுக்குத் துணையாக ஒத்தாசை புரியவந்த அந்தக்கிழவர் பத்மா இவ்வளவு சடுதியில் மறைந்து போவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் போன பிறகு ஒரு தினம் சுவாமிநாதன் தம் மூட்டையை எடுத்துக் கொண்டு ரீதரனைப் பார்க்க வந்தார்.

என்ன? எங்கே கிளம்புகிறீர்கள்?’ என்று கேட் டார் பூரீதரன்.

எனக்கு இங்கே என்ன பாக்கி இருக்கிறது? மகா லட்க மி மாதிரி இருந்தவள் போய்விட்டாள்!' என்று கண்ணிர் பெருகக் கூறினார் சுவாமி.

பூரீதரன் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சுவாமி ! உமக்கு இங்கேதான் இனிமேல் முக்கியமான வேலைகள் பாக்கி இருக்கின்றன. அவள் போய் விட்டாள். நீரும் போய் விட்டால் இந்தக் குழந்தையை யார் வளர்ப்பார்கள்?'