பக்கம்:முத்துச் சிப்பி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 of

டிருந்த ஊஞ்சலில் ஜெயபூரீ மட்டும் உட்கார்ந்து ஆடி கொண்டிருந்தாள். குழந்தை தனியாக இருக்கிறாே .நினைத்துக்கொண்டு, *ஜெயபூரீ ! நீயு וגש יו"יי יי என்னோடு வருகிறாயா அம்மா? உன் அத்தை எங்கே?' ' என்று கேட்டார் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு .

ஜெயது ஊஞ்சலை நிறுத்தினாள். பிறகு பலமாகக் கைகளை ஆட்டி, "நான் வரல்லேப்பா. அத்தை கிளப் புக் குப் போயிருக்கா. நான் மாமா கிட்டே கதை கேட்கப் போறேன். தான் வர லை. நீ போகலாம்... டா...... டா...... என்று கையை அசைத்துத் தகப்பனாருக்கு விடை கொடுத்தாள் அந்தப் பெண் 1

ரீதரன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். கு முந்தையின் மனம் எவ்வளவு நுட்பமானது. போகிற இடத்துக் கெல்லாம் நீ வர முடியுமா என்று தாம் சற்று முன் கேட்டதைப் புரிந்து கொண்டு, எவ்வளவு சமர்த் தாக நடந்து கொள் கிறாள் ஜெய பூரீ என்று மனதுக்குள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.

காரை வெளியில் நிறுத் தி விட்டு அவர் உள்ளே நுழைந்ததும் நாகராஜனின் மகள் சுமதி எதிரே ஒடி வந்தாள். கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு , 'டாக்டர் , ஜெயபூரீ வரவில்லையா? என்று கேட்டாள்.

'முதலில் வருகிறேன் என்று தான் சொன்னாள் அம்மா. பிறகு வரவில்லை என்று சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை போ. காரணம் எ ன வாக இருக்கும்? நீ சொல் பார்க்கலாம்......? ரைட்... அம்மா எங்கே? மாடியில் இருக்கிறாளா? ன்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறி மாடிக்குச் சென்றார்

புரீதரன்.