பக்கம்:முத்துச் சிப்பி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I 6

சுமதி குதித்துக் கொண்டு உள்ளே ஒடினாள் . 'அத்தை! அத்தை டாக்டர் மாமா வந்திருக்கிறார். கை அலம்ப சோப்பும், வென்னிரு ம் வேண்டு மாம் . என்று கூவிக் கொண்டே சமையல் அறைக்கு ன் சென்றாள்

அவள் .

பவானி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வென்னி ரை

ஊற்றி வைத்தாள். சோப்பை நறுக்கி எடுத்துக் கொண்டே, சுமதி ! ன்னாலே இவற்றை எடுத்துப் போய் மாடியில் கொடுக்க முடியுமா? என்று கேட் டாள். சிறிது நின்று யோசித்து விட்டு, " அந்த

கோபாலன் பொருந்தி வேலை செய்கிறதில்லை. பெண் டாட்டியை சினிமாவுக்கு அழைத்துப் போகிற ஜோரில் பாதி வேலைகளைப் போட்டு விட்டுப் போய் விட்டான். வென்னிர் சுடப் போகிறது. நானே எடுத்து வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு மாடிக்குப் போனாள்

பவானி.

கோமதியின் உடம் பு பவானி வந்த பிறகு, எவ்வளவோ தேறியிருந்தது. வெள்ளை வெளே ர்

என்று வெளுத்துப் போயிருந்த கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்திருந்தது. நாலைந்து பவுண்ட் திறை கூட ஏறி இருப்பதாக பூரீதரன் கூறினார். கை நாடி யைப் பரிசோதித்து விட்டு அவர் , பலவீனம் ரொம் பவும் குறைந்து விட்டது. இன்னும் மூன்று ஊசிகள் போட்டால் போதும். பிறகு தேவையில்லை. மாடியி லேயே இப்படி அடைந்து கிடக்காதீர்கள். காற்றோட் டமாக வெளியிலே உலாவ வேண்டும். சிறுசிறு வேலை கள் செய்தாலும் குற்றமில்லை. இப்படிக் காற்றாட வெளியில் போய் விட்டு வருகிறது தானே! நாகராஜன் எங்கே? ஊரில் இல்லையா? என்று கேட்டார் பூரீதரன். இப்படிப் பேசிக் கொண்டே ஊசியையும் ஏற்றினார் . பச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்குக் கூட