பக்கம்:முத்துச் சிப்பி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I U

பூசி, குங்கு டாம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.

எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார் வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வய துக்கு மேல யுெம் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர்

கல்யாண ராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.

'நீ! இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா பாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடு கூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?'

"ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடுவீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்துகொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்' என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.

'இன்னொரு கல்யாண மா? உன் னை விட்டு விட்டா?' என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல் வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்த னையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக் கூத் தாகவே தோன்றின.

அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒருகாரைச்சுவர்தான்