பக்கம்:முத்துச் சிப்பி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I 9

சதாவது சூடாகச் சாப்பிடுகிறாயா? புதுப் பால் கறந்து விட்டான். காய்ச்சி வைத்திருக்கிறேன்.

ஒவல்டின் போட்டுக் கொண்டு வரட்டுமா?

என்று கேட்டாள். " "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பவானி எனக்குப் பசியே இல்லை' என்றாள் கோமதி.

பவானி சிறிது தயங்கிக் கொண்டே நின்றாள். பிறகு சற்றுப் பயத்துடன், ' கீழே இறங்கி வாயேன் மன்னி. இன்றைக்கு வெள்ளிக்கிழமை, கைகால்களை அலம்பிக் கொண்டு சுவாமி படத்துக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யேன். சற்றுக் காற்றாட ஊஞ்சலில் உட்காரேன் . இப்படி நாள் கணக்கில் இந்த அறைக் குள்ளேயே அடைந்து கிடந்தால் மனசு தான் என்னத் திற்கு ஆகும்?' என்று அழைத்தாள்.

கோமதிக்கு முதலில் அலுப்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் இருந்தது. வானி சொல்லுகிறாளே என்று நினைத்துக் கீழே இறங்கி வந்தாள்.

கூடத்தில் ரேடியோ மேஜை மீது முன்னைப் போல் பத்திரிகைகளும் கிழிந்த துணிகளுமாக இராமல் துப்புர வாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த பூஜைக் கூடத் திலிருந்து மலர்களின் நறுமணம் "கம் மென்று வீசியது. பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட

1Ꮧ❍T ←Ꮱ © &$ ᎧᏈ☽ Ꭷrr 11 படங்களுக்குச் சாத்தி இருந்தாள்.

அந்த வீட்டில் சமையலுக்கு ஆள் கிடையாது. மாதத்தில் அநேக நாட்கள் ஹோட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு வந்து விடும். அதைக் குழந்தைக்குப் போட்டுத் தானும் சாப்பிடவே கோமதிக்கு அலுப்பாக இருக்கும். மின்சார அடுப்பில் காலையில் பாலைக்காய்ச்சி, தானே காட் பி போட்டுக் கொண்டு விடுவான் நாகராஜன். மனைவி எழுந்து போட்டுக் கொடுக்க வேணடும் என்று காத்திருக்க மாட்டான் . அவள் படுக்கையை விட்டு