பக்கம்:முத்துச் சிப்பி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.I

மனைவி ஒரு வியாதிக்காரி. ஆண்களின் மனம் ரிங் காரமிடும் வண்டைப் போன்றது. மலர்ந்த மலர்களிலே மது வும் அழகும் இருக்கின்றனவா என்று சோதனை போடும் தன்மையை உடையது வண்டு

வாயிற்படி ஏறும்போதே சிரித்துக் கொண்டு வர வேற்கும் மனைவி சதா கட்டிலில் படுத்துக் கொண்டு முனகியவாறு இருந்தால் எந்தக் கணவன்தான் அலுத்துக்

கொள்ள : ... டான் ?

பணத்தை மதியாமல் நாகராஜன் புட்டி புட்டியாக மருந் , கள் வாங்கினான். அவள் வாய் அசைப்பதற்கு முன் பணிபுரிய அந்த வீட்டில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில் ருெப்பவர்கள் மூன்று பேர்! வேலையாட்கள் மூன்று பேர் 1

கோமதியின் உடல் நிலையைவிட மனோநிலையைச் சரியாகப் புரிந்துகொண்டவர் டாக்டர் பூரீதரன். உட வில் ஏற்பட்டிருக்கும் வியாதிகளுக்கு வைத்தியர்களால் சிகிச்சை செய்ய முடியும். உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

  • கோ மதி அம்மா உங்களை வரச் சொன்னாங்க ' என்று டாக்டர் வீட்டுக்கு, நாகராஜன் வீட்டைச்சேர்ந்த வேலைக்காரர்கள் யார் வந்து அழைத்தாலும் டாக்டர் பூரீதரன் பதறிக் கொண்டு போக மாட்டார்.

- அம்மாவுக்கு என்ன உடம்பு?' என்று கேட்பார் . 'ஒண்ணுமில்லிங்க, ஏதோ உடம்பு சரியில்லையாம், வரச் சொன் னாங்க என்பான் வேலையாள்.

பேசிக் கொண்டு நடமாடிக் கொண்டுதானே இருக்காங்க?'

' ஆமாங்க, இன்னிக்கு எங்க சம்பளம்கூட அம்மா

தான் குடுத்தாங்க!'