பக்கம்:முத்துச் சிப்பி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணிடம் அவருக்கு அலாதி அன்பு ஏற்பட்டது. அத்துடன் ராதா வயது வந்த பெண் . அவளைத் தக்கபடி காப்பாற்றித் தகுந்த இடத்தில் கல்யாணம் பண்ணித் தரவேண்டும் என்கிற கவலை பும் பட்டு வந்தார் சுவ மிநாதன் . அவர் வா க் கையை விளையாட்டாகவும் விசித்திரமாகவும் கருதுபவர் அல்ல. எதையும் தீர ஆலோசித்தே செய்ய வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.

அன்று மாலை ஆறு மணிக்கு வெளியே சென்ற ராதா இரவு ஒன்பது மணி வரையில் வீடு திரும்பவில்லை. வாசல் கேட் டுக்கும், உள்ளுக்கு மாக அலைந்து கொண் டிருந்தார் சுவாமிநாதன். பூரீதரன் யாரோ நோயாளி யைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார் . ஜெயபூரீ படுத்துத் துரங்கி விட்டாள். இந்த இடத்துக் குப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லி விட்டுப் போகாதோ’ என்று சுவாமிநாதன் தமக்குள் பல முறை கள் சொல்லிக் கொண்டார். வயசு வந்த பெண். என்ன தான் பி. ஏ. படித்திருந்தாலும், இவ்வளவு துணிச் சல் ஆகாது’ என்றுதான் அவருக்குத் தோன்றியது.

தெருவுக்கும் உள்ளுக்குமாக அலைந்து அலைந்து கால்கள் சோர்ந்து போய் உள்ளே வந்து உட்கார்ந் கார் சுவாமிநாதன். வெளியே சென் றிருந்த ரீதரனும் வந்து விட்டார். காரைக் கொண்டு போய் ஷெட்டில் விட்டு விட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது பெஞ்சில் கவலை யுடன் உட்கார்ந்திருந்த சுவாமிநாதனைப் பார்த்தார்.

என்ன சுவாமி, எனக்காகவா காத்துக் கொண் டிா க்lெர்கள்? சாயங்காலம் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிறு நிறைந்திருக்கி து எனக்குப் பசியே இல்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் போதும். ஜெய ரீ யும், ராதாவும் துரங்கிப் போய்விட்டார்களா?' ' என்று

கேட்டார்.