பக்கம்:முத்துச் சிப்பி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 26

"ராதாவா? அவள் சாயங்காலம் வெளியே போன வள்தான் . இன்னும் வரவே இல்லையே? எங்கே போனாள் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கவலை யுடன் விசாரித்தார் சுவாமிநாதன் .

  • எனக்குத் தெரியாதே! என்றார் பூரீதரன். 'எங்கே போயிருப்பாள்? யாராவது சினேகிதியின் வீட்டுக்குப் போயிருக்கலாம், வந்து விடுவாள்' என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றார் பூரீதரன்.

சுமார் பத்து மணிக்கு ராதா வீடு வந்து சேர்ந்தாள்.

சோர்ந்த முகத்துடனும் கவலையுடனும் தனக்காக வழி பார்த்துக் கொண்டு உட் கார்ந்திருக்கும் சுவாமிநாதன் எதிரில் வந்து நின்றாள். ஏதோ டிராமாவிற்கோ நடனத்துக்கோ அவள் வேஷம் போட்டுக் கொண்டு வந்: திருந்த மாதிரி இருந்தது அவள் அலங்காரம். நெற்றி யில் வகிட்டுக்கருகில் கட்டியிருந்த பதக்கமும், காதுகளில் ஆடும் ஜிமிக்கியும், காதளவு மை தீட்டிய கண்களும் அவளை ஒரு கோபிகையாகத் தோன்றச் செய்தன.

"'என்னம்மா குழந்தை 1 என்ன வேஷம் இது? . என்றார் சுவாமிநாதன் .

'வேஷம் தான் ! நாங்கள் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதற்காக நானும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் காண்பிக்க வேண்டும்

என்று தான் வேஷத்தைக் கலைக்காமல் என் சினேகிதியின் காரில் வந்தேன். இன்றைக்கு ரிகர் ஸல் ஆயிற்று. இன்னும் நாலு நாளில் டிராமா இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?' ' என்று கேட்டாள் ராதா.

சுவாமி நாதனுக்கு அவளை என்ன சொல்வது என்றே புரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு நிதானமாக

'அதெல்லாம் சரிதான். இப்படி நீ இரவு பத்து மன