பக்கம்:முத்துச் சிப்பி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 7

வரைக்கும் வெளியே சுற்றி விட்டு வரலாமா? சாப்பிட வேண்டாமா? வேளையில் சாப்பிட வில்லை யென்றால் :- டமபு என்னத்துக்கு ஆகும்? என்று தம் கருத்தை நாசூக்காக அறிவித்தார் சுவாமிநாதன்.

கீழே பேச்சுக்குரல் கேட்கவே மாடியிலிருந்து பூரீதரன் கீழே இறங்கிவந்தார். கூடத்தில் ஒளிரும் மெர்க் குரி விளக்கின் ஒளியில் அழகுப்பிம்பமாக நிற்கும் ராதை யைப் பார்த்தார் பூரீதரன். தன் சகோதரி இப்படி ஒப் பற்ற எழிலுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.

‘' என்ன சொல்கிறார் சுவாமி? நேரம் கழித்து வீடு திரும்பலாமா என்று கேட்கிறாராக்கும்?' என்று சிரித் துக் கொண்டே கூறியவாறு பூரீதரன் தங்கையின் அருகில் வந்து நின்றார்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேளையில் சாப் பிடா விட்டால் உடம்புக்கு ஆகாதாம். அதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார் அண்ணா' என்றாள் ராதா சிரித்துக் கொண்டே.

சுவாமிநாதன் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டு எலுமிச்சை ஊறுகாயும் கொண்டு வந்தார். ராதையை அங்கிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி, ஒவ்வொரு பிடியாகச் சாதத்தை எடுத்து அவள் கையில வைத்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற புரீதரன், என்னம்மா ராதா! உனக்குக் கல்யாண மாகி விட்டால் இந்தக் கிழவர் இங்கே இருக்க மாட்டார். உன்னுடன் வந்து விடுவார்! அப்புறம் என்பாடும் ஜெய பூரீயின் பாடும்தான் திண்டாட்ட மாகி விடும்' என்றார் வேடிக்கையாக.