பக்கம்:முத்துச் சிப்பி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1

இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்று தான். சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவளமல்லிகைமரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில்

மலரும் மலர்கள் யாவும் பவானியின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.

'இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணிர் ஊற்றி வளர்ப்பவனை மறந்து விட்டு. இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!' என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.

'அதுதான் உலக வழக்கம்' என்று பவானி விரக்தி யாகப் பதிலளித்து விட்டுக் கீழே உதிர்ந்திருந்த மலர் களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதி யிடம் கொடுத்தாள்.

இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்து விட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர்கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர், 'உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்கு ப் பால் தருகிறேன்' என்றார். பவானியின் மகன் பாலுவிடம் அவருக்கு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.

பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக் கத்துடன் உள்ளே சென்று, பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.

'நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று

குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?' என்று