பக்கம்:முத்துச் சிப்பி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2

கேட்டுக் கொண்டே அவர், செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் உளற்றினார். பிறகு அவளைப் பார்த்து, 'உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்து விடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்' என்றார்.

பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. 'பால் நான் தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள் ளத்தான் வேண்டும் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று நினைத் தா ள் பவானி.

இருந்தாலும், அவளுக்கு சுயகெளரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்ப மிருந்தால் அன்றே-அவள் கணவன் இறந்து போன தினமே-வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். ஆகவே பவானி விநய மாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத் துடன், 'மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள் என்றாள்.

கல்யாணரா மன் பவானியை விழித்துப் பார்த்தார். 'பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் டே சுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என் னை ப் பற்றியோ என் மன ைசப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லை யென் யால் பேசாமல் பாலை வாங் இ க் கொள்.

கல்யாண ரா பன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஒய்வு பெற்றுக்

கெ ண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு

i. * i. ■鬥 A יי. வந்து விட்டார் . அவர்களுடையது என்று சொல்ல

வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால்