பக்கம்:முத்துச் சிப்பி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 9

மனைவி எ ழி வரசியாக அலங்காாம் பண் ணிக் கொண்டு நின்றாலும் கவனிக்க அவனுக்கு அவகாசம்

  1. *

இருக்காது. மகள் பள்ளிக்கூடத்தில் பரிசுகள் வாங்கிக் கெட்டிக்காரியாக விளங்கினாலும் பெருமைப்பட அவன் கொடுத்து வைத்தவனல்ல.இக்காரணங்களே காமதியை ஒரு நிரந்தர நோயாளி ஆக்கிவிட்டன. வெளியார்

அந்தத் தம்பதியைப் பற்றிப் பெருமையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் . g) { தடவை

பெங்களுர் போய்விட்டு வந்த நாகராஜன் புடவை ஒன்று வாங்கி வந்தான். உடல் தெரியும்படி அவ்வளவு மெல்லி யதாக இருந்தது அப்புடவை. உடலெங்கும் ஜரிகைப் பூக்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது . * இந்தப் புடவையை உடுத்திக் கொண்டு என்னோடு என் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு வா' என்று அழைத்தான் நாகராஜன் .

புடவையைப் பார்த்தவுடன் கோமதியின் மனத்தில் ஒர் அருவருப்பு ஏற்பட்டது. அவள் அதுவரையில் அம் மாதிரி உடுத்திக் கொண்டதில்லை. கணவன் சொல் கிறா ரே என்று மனைவி எதை வேண்டுமானாலும் செய்து விட முடியுமா? நன்மை தீமையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது தான் சிறந்தது.

கோமதி அதை உடுத்திக் கொண்டு வர மறுத்தாள். அத்தி பூத்தாற் போல் தன்னை உடன் வரும்படி அழைக் கும் கணவனின் அன்பை உதறுகிறோமே என்று கோமதி மனம் வருந்தினான். இருந்தாலும் சுயகெளரவத்தை இழக்க அவள் விரும்பவில்லை. அன்று அவனுடன் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை.

நாகராஜன் மனைவியைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டான். அவள் ஒரு ஜடம் என்பது அவன் அபிப்பிராயம். அதன் பிற அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவேயில்லை.