பக்கம்:முத்துச் சிப்பி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3

ஒரு குழந்தை இல்லை. பால்யத்தில் திருச்செந்து முருகனையும் பழனி ஆண்டவனையும் வருஷத்தில் இரு முறை தரிசனம் செய்து தங்கள் குறையை முறையிட் டனர் அத்தம்பதி. ஆனால், மகப்பேறு மட்டும் அவர் களுக்குக் கிடைக்கவில்லை. கல்யாணராமன் தெளிந்த உள்ளத்தைப் படைத்தவர். ஆகவே, அவர் இந்தக் குறையை மறந்துவிட்டார். பார்வதிக்கு இது ஒரு ஆறாத குறை. அவள் இருந்த விரதங்களும், தவங்களும் மேலும் அவளுக்குப் புது ஒளியைத் தந்தன.

அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியத்தின் பிள்ளையும், அண்டை வீட்டில் இருக்கும் பவானியின் மகன் பாலுவும் ஒன்று தான். பாக்கியத்துக்கும் அன்றாடம் பார்வதி மோரும் பாலும் கொடுத்தாள். பவானிக்குக் கொடுத்தால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தி னால் தான் பார்வதி இதுவரையில் அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.

கல்யாணராமன் கபடமில்லாமல் கேட்டு, கொடுத் தும் விட்டார். பவானி, அத்தம்பதியின் உயர்ந்த மனப் பான்மையை வியந்து கொண்டே பால் தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். குழந்தை எழுந்திருப்பதற்குள் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுவதில் முனைந்தாள்.

அடுப்பங்கரையின் சுவரில் ஒரு காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று தேதி பதினைந்து, அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் வாழ்க்கையில் எத் தகைய மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டது! அவள் பார்வைக்கு எதிராகக் கொட்டையான எண் ைல் அது அவளைப் பார்த்து சிரித்தது. சரியாக இரண்டு வருவுங் களுக்கு முன்பு அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவளையும், அவள் கணவனையும் இந்த உலகத்தில் நிரந்தரமாகப் பிரித்த நாள். அந்தச் சனியன் பிடித்த