பக்கம்:முத்துச் சிப்பி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50

இறாள். பவானி வராவிட்டால் என் உடம்பு தேறி இருக்காது. பாவம்! அவளைப் பார்த்தால் என் மனசு

சங்கடப்படுகிறது’ என்று. இனிமேல் என்னோடு வெளியே வாயேன் அத்தை . ஜெயபூரீயின் வீட்டுக்குப் போகும் போது வருகிறாயா? என்று கேட்டாள்.

பேச்சின் இடையில் அந்தக்குழந்தையின் குரல் கம்மிற்று. பளபளக்கும் அவள் விழிகளில் கண்ணிர் திரண்டு நின்றது.

பவானி வாஞ்சையுடன் சுமதியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஆசையுடன் அவள் தலையை வருடி னாள். அப்புறம், கண்ணே ! பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் என் ஆசை. வேறு ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் எனக் கில்லை. உனக்குத் தலைவாரிப் பின்னி மலர் சூட்டிப் பொட்டு வைத்தால் என் மனத்திலே ஆனந்தம் பொங்குகிறது. நல்ல உணவாகச் சமைத்து எல்லோருக்கும் பரிமாறி னால் அவர்கள் சாப்பிட்டுப் பசி தீர்ந்தவுடன் என் வயிறு திருப்தியால் நிறைந்து விடுகிறது.

"இங்கே பார் சுமதி ! இந்த மகானைப் பற்றி நீ உன் சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பாய். பிறருடைய துன்பங்களுக்காக இரக்கப்பட்டு அன்பையும், அஹிம்சை யையும் தம் லட்சியமாகக் கொண்டு அரச போகத்தைத் துறந்தவரல்லவா இவர்?' என்று அருகில் மேஜை மீது இருந்த புத்தர் சிலையைக் காட்டிப் பேசினாள் பவானி, சுமதியும் பாலுவும் திறந்த வாய் மூடாமல் பவானி சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். புத்த ரையும் காந்தி அடிகளையும் போற்றி வணங்குவதால் தான் அத்தை இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள் என்று சுமதி நினைத்துக்கொண்டாள்.

அத்தை! அத்தை! என்று சொல்லிக் கொண்டே சுமதி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் இரண்டு முத்தங்கள் கொடுத்தாள்.