பக்கம்:முத்துச் சிப்பி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 o'

ககோமு! ஒரு நெக்லெஸ் விலைக்கு வந்திருக்கிறது. எட்டாயிரதி க்குள் அடங்கு மாம். பழைய வைர மாம். வாங்கிப் போட்டு வைத்தால் மேலே மூன்று நாலு வத் தால் விற்று விடலாம்!'

அதை வாங்குவானேன், பிறகு விற்பானேன்?

வாங்காமலேயே இருந்து விட்டால் அலுப்பே இல்லை.'

'அட, போட்டுக் கொள்கிற வேளையில் போட்டுக் கொள்ளேன். மேலே மூவாயிரம் கிடைத்தால் நமக்குத் தானே லாபம்! விற்கிறவருக்கு ரொம்பப் பணமுடை யாம்.

கோமதிக்கு இந்த வியாபாரப் பேச்சே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, பவானி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு விட்டு மாடிக்கப் போய் விட்டாள் . பளபள வென்று மின்னும் வைர நெக்லெஸை எடுத்துக் கொண்டு நாகராஜன் மாடிக்கு வந்தான். கோமதி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தாள்.

அதற்கப்புறம் நாகராஜன் அந்த நகையை வாங்கி னானா என்பதை கோமதியும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் கூறவில்லை. வேலை விஷயமாக வெளியூர்

சென்று விட்டான்.

மாடியில் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போன கோமதி கீழே இறங்கி வந்து டாக்டர் பூரீதரன் வீட்டுக்கு போன் செய்து, ராதா இருக்கிறாளா? என்று விசாரித்தாள். அவள் வெளியே போயிருக்கிறாள். கச்சேரிக்கு என்று சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன் , ' "நீங்கள் செளக்கியத்தானே அம்மா? என்றும் விசாரித்தார் அவர்.

'உம்... செளக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லை : என்று அலுப்புடன் கோமதி சொல்லிக் கொண்டே ச ரி.வி வரை போனில் வைத்தாள்.