பக்கம்:முத்துச் சிப்பி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கண் டான் ராதாவை ...

அன்றிரவு நாடகம் பார்த்து விட்டு வந்த மூர்த் கிக்கு வேறு எதிலும் மனம் செல்லவில்லை. ராதை யின் எழில் உருவம் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. தன்னைக் கோபிகையாக பாவித்துக் கொண்டு மீரா கண்ணனுடன் கனவில் விளையாடிய காட்சி அவன் மனத்தில் பதிந்துபோயிற்று. வளுடைய அழகிய முகத்தில் எத்தனை விதமான பாவங்கள் வெளிப்பட்டன! அவள் கணtர், கணிர் என்று பேசியும், பாடியும் சபை யோரிடம் வாங்கிய பாராட்டுக்களை நினைத்து மூர்த்தி மனம் களித்தான். எல்லோரும் தான் சிரிக்கிறார்கள். ஆனால் ராதா சிரித்தால் அதில் ஒரு தனி அழகு இருப்ப தாகவே அவனுக்குத் தோன்றியது. இப்படி எதையோ நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவும் மூர்த்தியை அவன் நண்பன் கோபி கவனித்தான்.

என்னப்பா இது! குட்டி போட்ட பூனை மாதிரி அைைகிறாயே, சரியாகச் சாப்பிடுகிறதில்லை, துரங்குகிற தில்லை. மூன்று நாட்களாக ஆபீஸ் வேலைக்கு மட்டம் வேறே!' என்று கேலி செய்தான் கோபி.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. அப்பா, அந்தப் பெண் யார்? எங்கிருக்கிறாள் என்பது ஒன்றும் தெரிய வில்லையே?’ என்று கூறினான் மூர்த்தி. கோபிக்கும் அந்த விவரங்கள் ஒன்றும் தெரியாது.

ஒ ஹா! அதுதானா விஷயம்? என்னவோ என்று பார்த்தேன்' என்று கூறிவிட்டு அ :ன் காலேஜூக்குப் புறப்பு டா .

மூர்த்திக்குத் தனியாக அந்த அறையில் இருப்புக் கொள்ளவில்லை. உடுத்திக் கொண்டு வெளியே புறப் பட்டான். நேராக சைனா பஜாருக்குச் சென்று தன்