பக்கம்:முத்துச் சிப்பி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 of

காரியாலயத்தில் நுழைந்து, டெலிபோன் அறைக்குள் சென்றான். ஜே.பியிலிருந்த நாடக நோட்டீசை எடுத்து எந்தக் கல்லூரி மாணவியர் அன்று நாடகம் போட்டார் கள் என்று கவனித்து விட்டு, அந்தக் கல்லூரிக்குப் போ ன் செய்தாள்.

காலேஜ் பிரின் ஸிபால் பேசினார்.

'நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பாராட்டிச் சொல்லவே தங்களை அழைத்தேன். ஹஅம்... நாடகத்தில் மீராவாக நடித்தாளே அந்தப் பெண் யார்? எந்த வகுப்பில் படிக்கிறாள்?' என்று நாசூக்காக விசாரித்தான் மூர்த்தி.

  • ஐவn. அவரை, மிஸ் ராதாவைத் தானே கேட் கிறீர்கள்? அவள் எங்கள் கல்லூரியின் பழைய மாணவி. சென்ற வருஷம் தான் படித்து பி. ஏ. பாஸ் செய்திருக் கிறாள். சூடிகையான பெண், எஸ்... எஸ்... டாக்டர் பூரீதரன் இருக்கிறாரே. அவருடைய தங்கை . . .

மூர்த்திக்கு இதற்குமேல் விவரங்கள் தேவை இல்லை. தேவையாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் விசாரித் தால் நன்றாக இராதென்று நினைத்துக்கொண்டு போனை வைத்துவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து "ஐஸ்க்ரீம் வரவழைத்துச் சாப்பிட் டான். நேராக டவுனில் இருந்து கோட ம்பாக்கம் செல்லும் பஸ் ஸில் புறப்பட்டான்.

வடபழனி செல்லும் பாதையில் பஸ் ஸிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான் அவன் கொஞ்ச துாரம் சென்றதும், ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் இருந்த கட்டடத்தின் வாசலில் போர்டு ஒன்று தொங்குவதைக் கவனித்தான் . . டாக்டர் பூரீதரன் எம். பி. பி. எஸ். மருத்துவ சாலை’ என்று போட்டிருந்தது. பகல் வேளை