பக்கம்:முத்துச் சிப்பி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 55

ய எனதால் கதவு பூட்டப்பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சியில் காவல் காரன் மட்டு ம் படுத்துத துங்கிக் கொண்டிருந்தான். மெதுவாகக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று. "ஐயா! ஐயா! என்று அவனை எழுப்பினான் மூர்த்தி.

அவனுக்கு நல்ல துக்கம். 'பகல் வேளைகளில் டாக்டர் இங்கே வரமாட்டார் ஐயா! வீட்டிலே போய்ப் பாரு' என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்துத் துங்க ஆரம்பித்தான் அவன் .

அங்கேதான் போகிறேன் . விலாசம் சொல் ஐயா என்று மறுபடியும் அவனை எழுப்பிக் கேட்டான்

மூர்த்தி காவல்காரனுக்குத் துாக்கம் தெளிந்து விட்டது. ' என்னய்யா சும்மாத் தொந்தரவு பண் lங்க ! ரயில்வே லயன் ஒரமாப் போவுது பாருங்க ரோடு, அந்த ரோடு கடைசியிலே இருக்கு துங்க அவர் பங்களா என்று கூறிவிட்டு, சட்டைப் பையில் இருந்த பீடித் துண்டைப் பற்ற வைத்துப் புகைவிட ஆரம்பித்தான் அவன்.

அப்பொழுது நடுப்பகல் வேளை. தெருக்கள் எல்லாம் நிசப்தமாக இருந்தன. சில வீடுகளிலிருந்து வானொலியில் மத்தியான இசை கேட்டுக் கொண்டிருந் தது. பெண்கள் சிலர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் சில பையன்கள் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

மூர்த்தி தெருவிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தான். ஒரு வீட்டு வாசலில் 'அறை வாடகைக் விடப்படும்’ என்ற விளம்பரம் காணப்பட்டது. கதவை. தட்டிக் கூப்பிட்டு விசாரித் கான். ஐம்பது வயசு மதிக்கு படியான ஒரு பெண்மணி கதவைத் திறந்து கொண் வெளியே வந்தாள். என்ன வேண்டும்? என் , விசாரித்தாள்.