பக்கம்:முத்துச் சிப்பி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56

மூர்த்தி தனக்கு ஒர் அறை தேவையாக இருப்பதாகக் கூறினான். அறையைத் திறந்து காண்பித்தாள் அந்த அம்மாள். அறை விசாலமாகவும் காற் றோட் டத்து

டனும் இருந்தது. மாதம் பதினைந்து ரூபாய் வாடகையென்றும் லைட்டுக்காக இரண்டு ரூபாய்

தனியாகக் கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவித் தாள் அவள். ஒரு மாதத்திய வாடகையை முன் பன மாகக் கொடுத்து விட்டு மூர்த்தி அங்கிருந்து இளம்பினான் ,

நேராக அதே தெரு வழியாகச் சென்று தேருக் கோடியை அடைந்தான் அவன். அங்கே பெரிய பங்களா ஒன்று காணப்பட்டது . வாசலில் டாக்டர் பூரீதரன் என்று ஒரு புறமும், மறுபக்கத்தில் ஜெயபூரீ என்று வீட்டின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. பங்களாவின் வாசலில் இருந்து உள்ளே கவனித்தான் மூர்த்தி. வீட்டிலே சந்தடி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று கவனித்தான் மூர்த்தி. இப்படியும் அப்படியும் ஏதோ ஒரு வீடு தேடுகிற மாதிரி மதில் சுவர் ஒரமாக நடந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தான் அரை மணி நேரம் ஆகியும் ஒருவரும் வெளியே வரவில்லை. அ.அத்துப் போய்ச் சோர்ந்த உள்ளத்துடன் அவன் திரும்புகிற போது, மாடியிலிருந்து ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.

o “Irrr go Lou " " ! வெட்டி வேர் தட்டிகளுக்குத் தண்ணிர் ஊற்றவில்லையா? " என்று கூறியவாறு ராதா 'பால்கனி' பக்கமாக வந்து தோட்டத்தில் மாமரத்தின் கீழ் சிமிட்டிபெஞ்சியில் படுத் திருந்த தோட்டக்கா ர னைக் கூப்பிட்டாள். வெள்ளைப் புடவை உடுத்தி, ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னல் போடாமல் முதுகில் புரள விட்டுக் கொண்டு அவள் அங்கு நின்ற காட்சி அழகாக இருந்தது.