பக்கம்:முத்துச் சிப்பி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 9

சாவியை அடுத்த அறையில் கொடுத்து விட்டுப் போகும் படி கூறிவிட்டுச் சென்றான் கோபி.

அவன் அறையைவிட்டுச் சென்றதும், மூர்த்தி எழுந் திருந்து கீழே சென்று ஹாஸ்டலில் சிற்றுண்டியும். க ப்பியும் சாப்பிட்டு விட்டு வந்தான். பிறகு , சோப்புத் தேய்த்து முகம் கழுவி, வாசனை வீசும் பவுடர் பூசிக் கொண்டான். தலைக்கு வாசனைத் ைதலம் தடவி தலைவாரிக் கொண்டு, உடை அணிந்து கொண் டான். பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்படும்போது, மணி சரியாக ஏழு அடித்து விட்டது. கோடம் பாக்கம் துே Tட்டில் அவன் பார்த் திருந்த அறைக்குச் சென்று சாமான்களை வைத்துவிட்டு இரவுச் சாப்பாட்டுக்காக மாம்பலம் பாண்டி ஜாரை நோக்கிப்

ோனான் மூர்த்தி.

கல கலவென்று இரவு ஒன்பது மணி வரையிலும் கூடச் சந்தடியாக இருக்கும் அந்தக் கடைத் தெருவில் இருந்த ஒரு வளையல் கடையின் முன்பாக ஒரு ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து ராத இறங்கினாள் . கை யிலிருந்து வெல்வெட் பையைச் சுழற்றிக் கொண்டே அவள் கடைக்குள் நுழைவதை ர்த்தி கவனித்தான் . நடைபாதையில் பின்கள் , பித்தான்கள் கிளிப் புகள் விற்கும் ஒரு கடை அருகில் நின்று ஏதோ வியாபாரம் செய்பவனைப் போல் வளையல் கடையைக் கவனித்துக் கொண்டு நின்றான் மூர்த்தி. ராதா உதட்டுச் சாய புட்டி ஒன்று வாங்கினாள். ஜிலு ஜி.லு வென்ற சுடர் விடும் போலிக் கற்களால் செய்த மாலை ஒன்றை எடுத்துப் பார்த்தாள். நட்சத்திரங்கள் போல் செப்த மாலையின் நடுவில் சிவப்பு ஒற்றைக் கல் வைத்து பதக்கம் காணப்பட்டது. மாலையைத் தன் கழுத்தில் பதி வைத்துப் பார்த்துக் கொண் டாஸ் ராத எதிரே கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது . சங்கு போன்ற