பக்கம்:முத்துச் சிப்பி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G 2

கொடுத்து அனுப்பி விட்டு, சுவாமிநாதனுடன் ராதா நடந்தே வீடு சென்றாள்.

வீட்டுக்குள் செல்லும் வரையில் பேசாமல் இருந்த ராதா, சற்று பயத்துடன், 'அண்ணா வந்து விட் டாரா? என்று கேட்டாள் .

இல்லை அம்மா, வக்கீல் வேதாந்தத்தின் மனை விக்கு உடம்பு அதிகமாக இருக்கிறதாம். அவருடைய பெண் டாக்டர் காமாட்சி இவரை வந்து பார்த்து விட்டுப் போகும்படி போன் செய்தாள். போயிருக் கிறார் என்றார் சுவாமிநாதன்.

ராதா அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். கைப் பையைத் திறந்து அன்று வாங்கிய மாலையை எடுத்து அருகில் இருந்த மேஜை மீது வைத்தாள். இதைப் பாருங்கள்! பத்தாயிரம் இருபதினாயிரம் கொடுத்து வாங்கு ம வைர மாலை இதனிடம் தோற்றுப் போக வேண்டியதுதான். எப்படி ஜ்வலிக்கிறது பாருங் கள்! என்று சுவாமிநாதனிடம் காட்டினாள்.

சுவாமிநாதன் சிரித்தார். கையில் இருந்த பிரம்பை ஆணியில் மாட்டினார். ராதாவின் அருகில் வந்து உட் கார்ந்தார்.

இது ஜ்வலித் து விட்டால் மட்டும் நிஜ வைரத் தோடு இதை ஒப்பிட்டு விட முடியுமா ராதா? நான்கு நாளைக் குத் தண்ணிர் பட்டால் மங்கிக் கறுத் துப் போகுமே. வைரம் மாதிரி என்றைக்கும் நிரந்தரமான ஒளியோடு இது இருக்கு மா என்ன? போயும் போயும் இதன் மேல் உனக்கு ஆசை போயிற்றே! வீட்டிலே வேறு மாலையே இல்லையா என்ன? அதையெல்லாம் பெட்டி யில் வைத்துப் பூட்டிவிட்டு, இதைப் போய் வாங்கி யிருக்கிறாயே அம்மா, உனக்கு ஒன்றுமே தெரியவில்லை போ... ' "