பக்கம்:முத்துச் சிப்பி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63

சுவாமி நாதனின் சுபாவத்தை ராதா நன்றாக அறி வாள் . அசடு அசடு . என் பார் . அவருக்குக் கோட ம் வந்திருக்கிறது என்று அதற்குப் பொருள் .

அவர் கூறியதைக் கேட்ட ராதா கல கலவென்று சிரித்தாள். கழுத்தில் ஏற்கெனவே அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றிவிட்டு, புதிதாக வாங்கி வந்த மாலையை அணிந்து கொண்டு அவர் எதிரில் வந்து நின்றாள் அவள் .

வசந்த காலத்துப் பெளர்ணமி இரவில் மலர்ந்த மல்லிகையைப் போல் அவள் அழகு பிரதிபலித்தது. * இப்படி அழகும், அறியாமையும். வெகுளித்தனமும் நிறைந்த இந்தப் பெண்ணுக்குத் தகுந்த கணவன் வாய்க்க வேண்டுமே!’ என்று சுவாமிநாதன் கவலைப்பட்டார்.

அவரையறியாமல் அவர் கண்களில் நீர் சுரந்தது.

12. வக்கீல் வேதாந்தம்

வக் கீல் வேதாந்தத்தின் வீடு மயிலாப்பூரில் இருந்தது. சென்ற இருபத்தைந்து முப்பது வருடங்களில் சென்னை நகரில் பிரபலம் அடைந்திருந்த வக்கீல்களில் வேதாந்தமும் ஒருவர்.

தொழில் முறையில் அவர் எவ்வளவு பிரபலம் அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய பழைய வழக்கங்களை விட மனமில்லாதவர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, கணவன் எதிரில் நின்றுகூடப் பேசமாட்டாள். வேளைக்கொரு உடையும், நாளைக் கொரு நகையுமாக மாறிவரும் இந்தக் காலத்தில் அந்த அம்மாள் பழைய கெட்டிக் கொலுசும், கடியாரச் சங்கிலி யும் செயின் அட்டிகையும் இருபத்தைந்து வருஷங்களாக