பக்கம்:முத்துச் சிப்பி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6, 6

காமாட்சி கல்லாக உணர்வற்று நின்றாள். பதி னைந்து வருஷங்களுக்கு முன்பு காச நோயிலிருந்து மனித சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அ ந் த

எண்ணமே- அநேகம் பேரை- ஆரம்ப நோயாளிகளைக் கூட பலிவாங்கிவிட்டது.

அவன் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து கொண்டே இருந்தது.

  • பணத்துக்காக வியாதியை மறைத்து வைத்து விட் .ார்கள் என்னைப் பெற்றவர்கள் என்றான் வேதனை யுடன்.

அழாதீர்கள்' என்றாள் காமாட்சி. இதற்காக அழுவார்களா? நல்ல வைத்தியமாகப் பார்த் தால் போயிற்று. நாளைக்கே அப்பாவிடம் சொல்லி நல்ல வைத்தியரை வரவழைக்கிறேன். இந்தப் பாலைச் சாப் பிட்டு விட்டுத் துரங்குங்கள். ஆதரவுடன் அவன் கரங் களைப் பற்றிக் கட்டிலுக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் துரங்கிப் போனான் .

திறந்த மாடியிலே வந்து நின்றாள் அவள். வெளியே கபாலியின் கோபுரமும் குளமும் தெரிந்தன. பிறந்து புத் தி தெரிந்த நாட்களாய் யாருக்குமே தீங்கு எண்ணா தவள் அவள். அவள் வாழ்க்கை ஒரு சோக கீதமாக மாறப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் அவள் உள்ள மெல்லாம் எரிந்தது.

பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்த மகளை நோக்கினாள் சுப்புலட்சுமி. பின்னலில் தைத்திருந்த மலர்கள் வாடாமல், நலுங்காமல் இருந்தன. கண்களின் ஒ, த்தில் மட்டும் சிறிது மை கரைந்திருந்தது. தலை குனிநதவாறு கொல்லைப் பக்கம் சென்ற காமாட்சி