பக்கம்:முத்துச் சிப்பி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 67

தி ரும்பி வந்து, 'அம்மா! அப்பா எங்கே?' எ ன்று ேகட்டாள்.

'ஏனம்மா ! இங்கே தானே இருந்தார்’ என்றாள் சுப்புலட்சுமி.

வேதாந்தம் காப்பி சாப்பிட உள்ளே வந் தார் .

' குழந்தை உங்களைத் தேடினாளே ! என்று சொல் லிக்கொண்டே சுப்புலட்சுமி இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். இந்தாம்மா! நீ சாப்பிட்டு விட்டு உன் புருஷனுக்கும் கொண்டுபோய்க் கொடு என்றாள்.

தகப்பனார் காப்பி அருந்து கிற வரைக்கும் மகள் ஒன்றும் பேசவில்லை. அவர் அருகில் சென்று நின்று " அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம், நம்ப டாக்டரை அழைத்து வந்து காண் பியுங்கள். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு அழுகை வந்து

  • ' என்னம்மா உடம்புக் கு? தலைவலியா? ஜூரமா?" என்று பதறியவாறு கேட்டுக் கொண்டே சமையல் அறையை விட்டு வெளியே நடந்தார் வேதாந்தம் . அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவர் உள்ளே போவதற்குள் காமாட்சி அவர் மு ன்னால் வந்து

நின்றாள்.

" . அதெல்லாம் ஒன்று மில்லை அப்பா, அவருக்கு காசமாம். கல்யாணத்துக்கு முந்தியே இருந்ததாம்...'

வேதாந்தம் முகத்தைச் சுளித்துக் கொண்டார். தலையில் பெரிய கல் ஒன்று விழுந்து விட்டது என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. பணங்காசு அதிகம் கிடையாது. நமக்கு அடங்கிய மருமகனாக வீட்டோடு இருப்பான். தள்ளாத