பக்கம்:முத்துச் சிப்பி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 5

இருபத்தைந்து வயது கூட நிரம்பாத பூங்கொடியாகிய அவள், இனிமேல் கணவனை இழந்து தனித்துத்தான் நிற்க வேண்டுமா? பிறைமதி போன்ற அவளுடைய நெற்றியில் வட்ட வடிவமாகத் துலங்கும் அந்தக் குங்குமம் அழிந்துதான் போக வேண்டுமா?

டாக்டர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

பவானி நீர் மல்கும் கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். 'டாக்டர்! எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்' என்று தன் மலர் போன்ற கரங்களை ஏந்தி அவரிடம் பிச்சை கேட்டாள் அந்தப் பேதை. டாக்டரும் பிறப்பு இறப்பு என்கிற இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்ட ஒரு மனிதப் பிறவிதான் என்பது பவானிக்கு மறந்து போய் விட்டது. பாவம்! வாழ்க்கையின் இன்பக் கோட்டில் நிற்க வேண்டியவள் துன்பத்தின் எல்லையைக் காணும்போது தடுமாறுவது இயற்கைதானே? விழிகளின் கோணத்தில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவர், 'நான் என்ன அம்மா செய்ய முடியும்? உயிருக்கு உடையவனாகிய அந்தக் கடவுள் கருணை வைத்தால் உன் கணவன் பிழைத்து எழலாம். என்னால் ஆனவரைக்கும் முயன்று பார்த்தாகி விட்டது' என்றார்.

டாக்டர் தம் மன சைத் தேற்றிக் கொண்டு வெளியே போய் விட்டார். அப்புறம் அவர் முன்னைப் போல் சிரத்தையுடன் பவானியின் கணவனைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை.

பவானி எந்த நாளை ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்துக் கலங்கி இருந்தாளோ அந்தப் பதினைந்தாம் தேதி வந்தது. அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. கிழக்கே உதய சூரியன் பளீரென்று உதய

மானான். மலர்கள் மலர்ந்தன. பறவைகள் உதய