பக்கம்:முத்துச் சிப்பி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6, 8

வயசில் அவனும், மகளும் ஆதரவாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்த எண்ண மெல்லாம் ஒரு விநாடியில் மறைந்து போயின.

பாதிப்படி ஏறியவர் திரும்பி விட்டார். டாக்டர் பூரீதரனுக்கு போன்’ செய்தார். அப்பொழுது டாக்டர் பூரீதரன் இளைஞன். வைத்தியக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகி யிருந்தன. இவர்கள் குடும்பத்தில் சில்லறை வியாதி களுக்கு வைத்தியம் பார்த்து வந்தான்.

அவனுக்குத் தெரிந்த பிரபல வைத்தியர்களை அழைத்துவந்து நல்ல முறையில் வைத்தியம் செய்து பார்த்தான் பூரீதரன்.

பலன் பூஜ்யமாகி விட்டது. காமாட்சி விதவை யானாள். அவர்கள் கல்யாணத்தை ஆமோதித்து நடத் திய அதே சமூகம், இந்தச் சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.

"அதிர்ச்சி வைத்தியம்’ என்று வைத்திய முறையிலே ஒன்று இருப்பதாகப் படிக்கிறோம். வேதாந்தம் அடி யோடு மாறிப் போனார். அவரிடம் இருந்த பழைமை எண்ணங்கள். அசட்டுத் தனங்கள். அதைரியம் யாவும் மறைந்து போயின. காமாட்சியை மேலும் இண்டர் மீடியட்' வரை படிக்க வைத்து. வைத்தியக் கல்லூரியில் சேர்த்தார். மரு மகனின் மறைவு , மகள் நிற்கும் நிலைமை, சமூகத்தின் சுயநலம் யாவும் சேர்ந்து அவ ருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தன.

இப்பொழுது டாக்டர் காமாட்சி, பூரீதரனின் சக டாக்டர். வேதாந்தம் மாறினாரே தவிர, சுப்புலட்சுமி மாறவில்லை. மனம் இடிந்தவள் இடிந்தவள்தான்.

சுவாமிநாதன் ராதாவிடம் கூறியபடி அன்று சுப்பு ட்சுமியின் உடல் நிலைமை கவலைக்கிட மாக இருந்